10.19.2010

Alice and her twin friends.


பதிவுலக நண்பர்களே,

Puzzles( புதிர்கள் ):
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்களில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு நபர்,  Raymond Smullyan அவர்கள். இவர் பல புதிர் கேள்விகளை உருவாக்கியவர். இன்றும் பல quiz போட்டிகளிலும், நேர்முகத்தேர்விலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆசிரியர் இவர் தான். இவர் ஒரு சிறந்த தத்வுவஞானியும் கூட.
Raymond Smullyan.

இவர் எழுதிய புத்தகம் ஒன்றில் இருந்தது இது.
"Which is better, eternal happiness or a sandwich? It would appear that eternal happiness is better, but this is really not so! After all, nothing is better than eternal happiness, and a sandwich is certainly better than nothing. Therefore a sandwich is better than eternal happiness."

இவர் அறிவாற்றலை அறிந்துக்கொள்ள இதுவே போதும் என்று நினைக்கிறேன். இதன் தமிழ் மொழிபெயர்ப்பை யாரேனும் எழுதினால் நன்றாக இருக்கும். இந்தப்பதிவில், இவரின் ஒரு புகழ்பெற்ற புதிர் ஒன்றை தருகிறேன். ஆர்வம் உள்ளவர்கள், புதிர்க்கான விடையை comment- ல் எழுதலாம்.

அந்தப்புதிர்:

அனைவரும் Alice and the wonderland படித்து இருப்பீர்கள் என்று நினைகிறேன். இந்த கதையை வைத்து இவர் பல புதிர்களை உருவாக்கினார். அதில் ஒன்று தான் இது.

இந்த wonderland-ல், பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தை கொண்ட இரட்டையர்கள் இருந்தனர். இதில் ஒருவனின் பெயர் ராமு, மற்றவனின் பெயர் சோமு. இந்தக்காட்டில், சிங்கம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொய் மட்டும் தான் பேசும். மற்ற தினங்களில் உண்மையையே பேசும். இதருக்கு மாறாக, புலி வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொய் பேசும். மற்ற தினங்களில் உண்மை பேசும். இவர்களில் ஒருவன் சிங்கம் போன்றவன். மற்றொருவன் புலியை போன்றவன். Alice க்கு இவர்கள் நண்பர்கள். ஆனால் அவளுக்கு, இவர்களில் யார் எந்த நாளில் பொய் சொல்லுவார்கள் (அதாவது யார் சிங்கம் போன்றவன் யார் புலி போன்றவன்) என்று தெரியாது.

Alice ஒருநாள் இந்த இரட்டையர்களை சந்தித்தாள். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், இவளுக்கு யார் ராமு, யார் சோமு என்று தெரியவில்லை. ஆனால், அந்த இரட்டையர்கள் சில வார்த்தைகள் பேசியதும், இவள் யார் ராமு யார் சோமு என்பதை மட்டும் அல்ல, யார் சிங்கம் போன்றவன் என்றும், யார் புலி போன்றவன் என்றும் தெரிந்துகொண்டாள்.

அவர்கள் பேசிய வார்த்தைகள் இங்கே:

ஒருவன்:   இன்று sunday இல்லை.
அடுத்தவன்:  இன்று திங்கட்கிழமை.
ஒருவன்:  நாளை சோமு பொய் பேசும் தினம்.
அடுத்தவன்: நேற்று சிங்கம் பொய் பேசியது.

இதை வைத்து நீங்கள் யார் ராமு, யார் சோமு, யார் யார் எந்த மிருகம் போன்றவர்கள்  என்றும் கண்டுபியுங்கள் பார்ப்போம். இதை சரியாக கண்டுபிடிக்கும் பட்சத்தில், இது நடந்தது எந்த கிழமை என்றும் உங்களால் சரியாக சொல்ல முடியும். புதிருக்கு விடை தேட தயாரா.?

74 comments:

geethappriyan said...

நல்ல பகிர்வு இன்றைய பலகையில்,நன்றி நண்பா
Alice and the wonderland இன்னும் பார்க்கவில்லை படமாக பார்த்து விடுகிறேன்.விடையை அப்புறம் ஆஃபீஸ் விட்டதும் சொல்கிரேன்.

Elayaraja Krishnamoorthy said...
This comment has been removed by the author.
Elayaraja Krishnamoorthy said...

Is it Thursday buddy?

கொழந்த said...

நண்பா...
டெனிம் மோகன் எழுதியிருந்த புதிர்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

கொழந்த said...

சீக்கிரம் முயற்சி செய்து சொல்கிறேன்..

ஆங்கிலப் புதிரை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கலாமே....What if anything lost in translation...

Praveen said...

@ கீதப்பிரியன்:
Alice and wonderland படத்திற்கும் இந்தகேள்விக்கும் அவ்வளவாக சம்மந்தம் இல்லை நண்பரே. இருந்தாலும் படத்தை பாருங்கள். உங்கள் விடையை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Praveen said...

@Elaya:

என் பலகைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
உங்கள் விடைக்கான காரணம் சொல்ல முடியுமா நண்பரே..?

Praveen said...

@குழந்தை:

உண்மைதான். ஆங்கில புதிரை ஆங்கிலத்தில் கொடுத்திருந்து இருக்கலாம் தான். ஆனால் தமிழ் ஆர்வத்தினால், இப்படி செய்துவிட்டேன். புதிரில் எந்த மொழிபெயர்ப்பு தப்பும் இருக்காது என்றே நம்புகிறேன்.

BTW, டெனிம் புதிர்க்கான விடையை கண்டுபிடித்துவிட்டீர்களா.?

எஸ்.கே said...

x: ஒருவன்
y: அடுத்தவன்
assume x and y speak lie in alternate days

if x is lier
day is sunday, today somu lier, he is somu
and y is ramu and he is true person, but he said that day monday and lion is lied yesterday. SO THIS IS NOT CORRECT

if y is lier
day is not monday, yesterday lion not lied. today only lion lies. so y is lion.
and x is true person as he said tomorrow somu lier - he is somu

so y is somu he is like lion and x is ramu he is like tiger. and the day is not sunday and not monday any other day.

இது தப்பாகவும் இருக்கலாம். ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லியிருக்கேன். கரெக்டா தப்பான்னு சொல்லுங்க

Praveen said...

எஸ்.கே அவர்களே,

முயற்சி செய்ததற்கு நன்றி. கேள்வியை நீங்கள் சரியாக புரிந்துகொண்டால், விடை மிகவும் எளிதாக கிடைத்துவிடும்.
தொடர்ந்து முயற்சிக்கவும். BTW, இந்த புதிருக்கு எந்த assumptions -உம் தேவையில்லை.

Praveen said...

குழந்தைக்கு என்ன ஆனது.? இன்னும் பதில் வரவில்லையே அவரிடம் இருந்து.

கொழந்த said...

நாட்டுல இந்த புதிர் போடுறவங்க தொல்லை தாங்கலப்பா..
இதயும் நானே solve பண்ணனுமா...
இவ்வளோ நேரத்துக்குள்ள யாராவது முடிச்சிருப்பாங்கனு நெனச்சேன்...ஓகே..

Alice இன்னைக்கு(செவ்வாய்க்கிழமை) ரெட்டையர்களை சந்திக்கிறான்னு வெச்சுக்குவோம்..

ஒருவன்: இன்று sunday இல்லை.
அடுத்தவன்: இன்று திங்கட்கிழமை

இதிலிருந்தே யாரு உண்மை பேசுறா யாரு பொய் பேசுறான்னு அவளுக்கு தெரிஞ்சிரும். ஸோ..அடுத்த ரெண்டு பதில்களில் ஒண்ணு உண்மையா இருக்கும்..அதை வெச்சு யாரு சோமு..னு சுலபமா தெரிஞ்சிரும்..

கொழந்த said...

இது சரியா தவறானு சொல்லவும்..அப்பறம் மீதிய சொல்றேன்..

கொழந்த said...

இதுக்கு இன்னொரு possibilityயும் இருக்கு போல...

Unknown said...

@கொழந்த

இப்ப தெரியுதா நான் ஏன் சுலபமான புதிரா கேட்டேன்னு,இது நீங்க நினைக்குற மாதிரி அவ்வளவு எளிது கிடையாது கொழந்த,
அவரின் புத்தகம் படித்த எனக்கே இதை solve பண்ண டங்குவாரு கிளிந்துகொண்டு இருக்கிறது,கிழமையை தவிர மற்ற அனைத்தையும் கண்டுபிடித்து விட்டேன், neenga சொன்னது தவறு கொழந்த( ஹையா ஜாலி)

Praveen said...

@குழந்தை:
நாம் ஏன் முதலில் அன்று செவ்வாய்கிழமை என்று வைத்துகொள்ளவேண்டும்.?
நான் முன்பே சொன்னது போல, இந்த புதிருக்கு எந்த assumptions உம் தேவை இல்லை குழந்தை அவர்களே.

@டெனிம்:
தொடர்ந்து முயலுங்கள் நண்பரே..

எஸ்.கே said...

முதலில் டெனிமுக்கும் ப்ரவீன் அவர்களுக்கும் பெரிய பெரிய நன்றி! காலையில் இருந்து மண்டை குடைச்சல் கொடுத்து அலைய வச்சிட்டீங்க! :-) . சைக்காலஜியில் logical thinking பற்றி படித்துள்ளேன். இது போல கேள்விகள் சால்வ் பண்ணியிருக்கேன். ஆனால் இவை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடிச்சு! ஒரு நல்ல புத்தகத்தை/உளவியலாரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
நன்றி! நன்றி! நன்றி!
கேள்விக்கு பதில் கிடைக்காம அந்த புத்தகங்களை நெட்டில் தேடிக் கண்டுபிடித்து படித்தேன். படிக்க படிக்க என்னமோபோல் ஆயிடுச்சு!
நல்ல புத்தகங்கள்! நிச்சயம் எனக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
மீண்டும் நன்றி! நன்றி! நன்றி!

கொழந்த said...

தல...

Aliceக்கு இன்னைக்கு என்ன கிழமைனு கூடவா தெரியாது...

ஒருவன்: இன்று sunday இல்லை.
அடுத்தவன்: இன்று திங்கட்கிழமை

இன்னைக்கு செவ்வாய்க்கிழமைனு Aliceக்கு தெரியும்தான..அதுனால ஒருவன்-சொல்வது உண்மை...
அடுத்தவன் - சொல்வது பொய்.
இந்த possibilityய எப்படி மறுக்க முடியும்...ஒருவேள Alice கிழமை கூட தெரியாத பொண்ண இருந்தா இவர்களை மட்டும் தெரிஞ்சு என்ன பண்ணப்போகுது..போய் விளையாட சொல்லுங்க

இன்னொரு possibility -இதுவொரு endless puzzleஆ இருக்க வாய்ப்பிருக்கு.

கொழந்த said...

//neenga சொன்னது தவறு கொழந்த( ஹையா ஜாலி//

என்ன ஒரு வில்லத்தனம்...நான்தான் முன்னாடியே சொல்லிட்டேனே..
எனக்கு ரொம்ப சிறுசு - அறிவுனு.

அய்யா டெனிம்...உம்ம பதிவுல இருந்தவைகள் ரொம்ப சுலபமான Puzzleகளாக எனக்கு தோன்றியது..

Unknown said...

சரி கொழந்த நான் முதல் இரண்டு புதிர்களை வேண்டும் என்றே சுலபமாக கொடுத்தேன்,

Unknown said...

அந்த புத்தகத்தை படித்திர்களா இல்லையா

Unknown said...

உண்மையில் உமக்கு அறிவு அதிகம் தான் வேற யாரும் பதில் சொல்லவில்லையே

கொழந்த said...

வந்திட்டீங்களா அய்யா..

கொழந்த said...

என் பதிலில் என்ன குறை கண்டீர்

Unknown said...

நீங்கள் யோசிக்கும் விதமே தவறு கொழந்த

எஸ்.கே said...

சபாஷ் சரியான பேட்டி!!

கொழந்த said...

//நீங்கள் யோசிக்கும் விதமே தவறு கொழந்த//

அய்..புத்தக எழுத்தாளர் சொன்னபடி தான் யோசிக்கனுமா...

இப்ப நீங்க தான் Alice சரியா...
உங்ககிட்ட வந்து ரெண்டு பேர்...
ஒருத்தர்(A) - இன்று sunday இல்லைனு சொல்லுறார்
இன்னொருத்தர்(B) - இன்று திங்கட்கிழமைனு சொல்லுறார்
இதுல ஏது உண்மை,பொய்னு உங்களுக்கு தெரியாதா

Unknown said...

நான் எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்

அடுத்தவன்: இன்று திங்கட்கிழமை.
அடுத்தவன்: நேற்று சிங்கம் பொய் பேசியது

முதலில் இதை பார்போம்

இன்று திங்கட்கிழமை,நேற்று சிங்கம் பொய் பேசியது , இதில் நேற்று என்பது sunday,sunday யாரும் பொய் சொல்ல மாட்டார்கள்,அப்ப அடுத்தவன் பொய் சொல்லுகிறான்

சரியா

கொழந்த said...

ஏன்னா உங்களுக்குத்தான் இன்று செவ்வாய்க்கிழமைனு தெரியுமே

கொழந்த said...

ஹலோ...Anyone???

கொழந்த said...

யாருமேயில்லையா...

Unknown said...

அடுத்தவன்: நேற்று சிங்கம் பொய் பேசியது எனபது பொய் என்றால் நேற்று சிங்கம் உண்மை பேசி இருக்கும்

சிங்கம் எப்போ உண்மை பேசும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்

Unknown said...

koncham maethu vaa type pannuraen wait pannavum

கொழந்த said...

நண்பா..
நீங்க Raymond Smullyan வழில யோசிக்கிறீங்களா..இல்ல உங்க வழியிலா

Unknown said...

அப்போ நாற்று என்பது

வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஏதாவது ஒரு நாளாக இருந்து இருக்கும் அப்போ எப்படியா இன்று செவ்வாய்க்கிழமையா இருக்கும்

எஸ்.கே said...

இந்த இரண்டு சகோதரை வைச்சு எத்தனை புதிர்பா அந்த புத்த்கத்தில்!!!

Unknown said...

என் வழியில் தான்

Unknown said...

சாரி நாற்று என்பது நேற்று

கொழந்த said...

உங்ககிட்ட ஒருத்தர் வந்து இன்னைக்கு சண்டே இல்லைன்னா அது சரியா..தவறா...

இன்னொருத்தர் வந்து இன்று mondayனு சொன்னா--அது நிச்சயம் தவறுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருமே

Unknown said...

புரியுதா SK கொஞ்சம் அந்த கொலந்திக்கு சொல்லுப்பா

Unknown said...

அது சரி எப்படி செவ்வாய்க்கிழமைனு சொல்லுரிங்க

கொழந்த said...

தல செவ்வாய்க்கிழமை - ஒரு உதாரணத்திற்கு.

இன்னைக்கு வெள்ளிக்கிழமைனு வெச்சுக்கோங்க

A - இன்னைக்கு sunday இல்லை
B - இன்னைக்கு Monday

இது ரெண்டுல எது சரி...முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க

Unknown said...

வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் இருக்கே

Unknown said...

கொழந்த தயவு செய்து கேள்வியை நன்றாக புரிந்து கொள்ளவும்

கொழந்த said...

//வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் இருக்கே//

அது இருந்திட்டு போகுது..ஆனா இன்னைக்கு "இன்னைக்கு sunday இல்லை" என்பது உன்மைதான..?
கிழமை கூடவா யாருக்கும் தெரியாது...

Unknown said...

யோவ் SK இருக்கியா கொஞ்சம் help பண்ணுய

எஸ்.கே said...

கொழந்த! புக்கை டவுன்லோட் பண்ணி படிங்க! தன்னால புரியும்! மற்றவங்க சொல்லி புரிவது கஷ்டம்! குழப்பும்.! படிக்க படிக்க சூப்பரா இருக்கு புக்!

http://depositfiles.com/files/uyrlu5kcz

Unknown said...

ohh நீங்க அந்த angle ல யோசிக்கரிங்களா..... அப்படி யோசிக்க கூடாது....

கொழந்த said...

யோவ்...எங்கயா எல்லாரும் போனீங்க

கொழந்த said...

//ohh நீங்க அந்த angle ல யோசிக்கரிங்களா//

ஏப்பா..சாமி..ஒருவழியா புரிஞ்சுதே

ஏன் அப்படி யோசிக்கக்கூடாது..

Unknown said...

நீக இப்படி யோசிச்சா கண்டிப்பா விடை கண்டு பிடிக்க முடியாது, SK சொல்லுற மாதிரி BOOK க டவுன்லோட் பண்ணி பாருங்க

Unknown said...

i have to go kolantha we will chat later

கொழந்த said...

//நீக இப்படி யோசிச்சா கண்டிப்பா விடை கண்டு பிடிக்க முடியாது//

ஏன் முடியாது..
ரெண்டு பேர பார்க்கிறேன்..எனக்கு இன்னைக்கு கிழமை தெரியும்...அதுனால யார் பொய் சொல்லறா-யார் உண்மை சொல்லுறான்னு ஈசியா சொல்லிருவேனே

கொழந்த said...

என் ஆங்கிளிலும் ஒரு flaw இருக்கு..அதை அப்பறம் சொல்றேன்.

@
எஸ்.கே.
அந்த கேள்வி தெரிஞ்சா இங்கிலிஷ்லா கொஞ்சம் இங்க தட்டி விடுங்க

எஸ்.கே said...

கொழந்த ஒரு தப்பு நடந்து போச்சு!
எழுத்தாளருக்கு அலைஸ்னா ரொம்ப புடிக்கும்போல அதனால் அலைஸ் கண்டுபிடிக்கிற மாதிரி கேள்வி இருக்கும்.

ஆனா இந்த கேள்வியில் அலைஸ் இல்லாம யோசிங்க. வெறும் சகோதரர்களின் விடை மட்டும் வைத்து!

கொழந்த said...

எஸ்'கே
இருக்கீங்களா..

கொழந்த said...

எஸ்'கே
இருக்கீங்களா..

எஸ்.கே said...

இருக்கேன்
வெய்ட்

எஸ்.கே said...

இதுதான் ஆங்கிலக் கேள்வி

On this great occasion, Alice resolved three grand mysteries. She came across the two brothers grinning under a
tree. She hoped that on this encounter she would find out
three things: (1) the day of the week; (2) which of the two
was Tweedledum; (3) whether Tweedledum was like the
Lion or the Unicorn in his lying habits (a fact she had long
desired to know!)
Well, the two brothers made the following statements:
First One / Today is not Sunday.
Second One / In fact, today is Monday.
First One / Tomorrow is one of Tweedledee's lying
days.
Second One / The Lion lied yesterday.
Alice clapped her hands in joy. The problem was now completely solved. What is the solution?

கொழந்த said...

தல...
காலையில continue....freshஆ ஆரம்பிப்போம்.அதுக்குளா வேற கஷ்டமான புதிர்கள் இருந்தா எடுத்து வெய்யுங்க...

இப்பவே எங்கம்மா திட்டுறாங்க..போய் தூங்குறேன். நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க...மறுபடியும் சொல்றேன்..ரொம்ப strain பண்ணிக்காதீங்க..தூங்குங்க...

கனவில் நமிதா வரக்கடவ......

Praveen said...

//ஆனா இந்த கேள்வியில் அலைஸ் இல்லாம யோசிங்க. வெறும் சகோதரர்களின் விடை மட்டும் வைத்து!//



குழந்தைக்கான மிகத்தெளிவான பதில். நன்றி எஸ்.கே அவர்களே. உங்களுக்கு புத்தகம் ரொம்ப பிடித்துபோய் விட்டது போல இருக்கிறதே.?

உங்களுக்கு இப்படி ஒரு புத்தகத்தையும், ஆசிரியரையும் அறிமுகம் செய்ததை எண்ணி பெருமை படுகிறேன்.



@குழந்தை :

காலையில் தெளிவாக யோசித்து விடை சொல்லவும். இதற்கு தெளிவான விடை உள்ளது. இது ஒரு endless puzzle அல்ல.. அதற்க்கு நான் gurantee..

கொழந்த said...

@Praveen
தல....நீங்க ஒண்ணும் தவறா எடுத்துக்க மாட்டீங்க என்ற நம்பிக்கையில் இதை வெளியிடுகிறேன்

B. TWEEDLEDUM AND TWEEDLEDEE
During one month the Lion and the Unicorn were absent
from the Forest of Forgetfulness. They were elsewhere,
busily fighting for the crown.
However, Tweedledum and Tweedledee were frequent
visitors to the forest. Now, one of the two is like the
Lion, lying on Mondays, Tuesdays, and Wednesdays and
telling the truth on the other days of the week. The other
one is like the Unicorn; he lie s on Thursdays, Fridays, and
S aturdays but tells the truth the other days of the week.
Alice didn't know which one was like the Lion and which
one was like the Unicorn, To make matters worse, the
brothers looked so much alike, that Alice could not even tell
them apart (except when they wore their embroidered
collars, which they seldom did) , Thus poor Alice found the
situation most confusing indeed! Now, here are some of
Alice' s adventures with Tweedledum and Tweedledee,

5 1
One day Alice met the brothers together and they made the
following statements:
First One / I' m Tweedledum.
Second One / I' m Tweedledee.
Which one was really Tweedledum and which one was
Tweedledee?

5 2
On another day of that same week, the two brothers made
the following statements:
First One / I' m Tweedledum.
Second One / If that' s really true, then I'm Tweedledee!
Which was which?

53.
On another occasion, Alice met the two brothers, and asked
one of them, "Do you lie on Sundays?" He replie d " Yes! '
Then she asked the other one the same question, What did
he answer?

54.
On another occasion, the brothers made the following
statements:
First One / (1) I lie on Saturdays.
(2) I lie on Sundays.
Second One / I will lie tomorrow.
What day of the week was it?

55.
One day Alice came across just one of the brothers. He
made the following statement: "I am lying today and I am
Tweedledee. "
Who was speaking?

56 .
Suppose, instead, he had said: " I am lying today or I am
Tweedledee." Would it have been possible to determine
who it was?

57.
One day Alice came across both brothers. They made the
following statements:
First One / If I' m Tweedledum then he' s Tweedledee .
Second One / If he' s Tweedledee then I ' m
Tweedledum.
Is it possible to determine who is who? Is it possible to
determine the day of the week?

58. A My stery Resolved
On this great occasion, Alice resolved three grand mysteries
......இதுக்கப்பறம் நம்ம எஸ்.கே கொடுத்திருக்கும் கேள்வி

கொழந்த said...

புத்தகத்த பார்த்த பிறகுதான் தெரிஞ்சது இது ஒரு series of puzzle. அதுனால மேல உள்ள ஏழு கேள்விகளுக்கும் விடை கண்டுபிடித்தால் மட்டுமே 58 கேள்விக்கு விடை சாத்தியம். ஏன்னா ஒவ்வொரு கேள்வியிலிருந்தும் ஒரு க்ளு Aliceக்கு கிடைக்குது இல்லையா....

இந்த புத்தகத்தில் பெரும்பாலானா புதிர்கள் எது மாதிரி series இருக்கே...

Anyway...உங்க+டெனிம் புண்ணியத்தில ஒரு செம புத்தகத்த பத்தி தெரிஞ்சுகிட்டேன். நன்றி

கொழந்த said...

நா சொன்ன ஆங்கிளை யாருமே ஏத்துக்கலையா.....என்ன கொடும.....

Praveen said...

@குழந்தை:

அந்தப்புத்தகத்தில், இவர்களை வைத்து நிறைய கேள்விகள் உள்ளது என்பது உண்மையே. ஆனால், அவை அனைத்தையும் solve பண்ணினால் தான் இதை solve செய்ய முடியும் என்பது இல்லை. அதை எல்லாம் solve செய்தால் இதை எளிதாய் முடித்துவிடலாம் என்பது தான் உண்மை. என் அலுவலக நண்பர் ஒருவர் இந்த புதிருக்கு நான் கொடுத்து இருக்கும் தகவல்களை மட்டும் வைத்தே பதில் அளித்துவிட்டார்.

கொழந்த said...

பாஸ்..
அறிவு கம்மினு ஒத்துக்க சிரமமா இருந்தா விட மாட்டிங்கிரீங்களே...

//நா சொன்ன ஆங்கிளை யாருமே ஏத்துக்கலையா// ரிப்பீட்டேய்....

அப்பறம்..தயவுசெய்து கொழந்தனு சொல்லுங்க இல்ல தம்பி சொல்லுங்க இல்ல பேரச் சொல்லுங்க...V.S.ராகவன் மாதிரி குழந்தைனு சொன்னா என்னமோ மாதிரி இருக்கு

எஸ்.கே said...

கொழந்தே, logical thinking படி நீங்க சொல்வதும் சரியானதே ஆனால் எழுத்தாளர் சொல்ல நினைத்தது அதுவல்ல! அலைஸ் என்னும் ஒருவர் இல்லாவிட்டாலும் விடையை கண்டுபிடிக்க முடியும் வெறும் இந்த 4 பதில்களை கொண்டே!

Unknown said...

Anbulla anna,
Ithula tamil eppadi type pandrathunu theriyala athanala ippadi english la type pandren.

Muthalil pesiyathu RAMU,

Irandavathu pesiyathu SOMU,

RAMU SINGAM pondravan.

SOMU PULI pondravan.

Avarkal pesiyathu FRIDAY.

Intha pathil sariyaka irukkum endru nambukiren.

Praveen said...

@saran:

கலக்கிட்ட போ. சூப்பர் டா. பதில்கள் மிகச்சரியானவை. எப்படி கண்டுபிடிச்சனு சொல்லமுடியுமா.?

Praveen said...

@saran:

இதில் தமிழில் டைப் செய்ய, google transliteration அல்லது NHM உபயோகிக்கலாம்.

Unknown said...

2nd & 4th sentence are contradictive.
Because Sunday no one will tell lies.
From this I concluded that 2nd person is speaking lies and 1st person is speaking truth.
Then from statement 1,2 and 3 I concluded the day they are speaking is not Sunday, Monday, Saturday.
From the 4th statement I concluded the day they are speaking must be Friday.
If it is Friday Lion will speak truth.
From 1st conclusion,
1st person is like Lion.
2nd person is like tiger.
From statement 3,
1st person must be Ramu and
2nd person must be Somu.
EPPUDI NANGALUM YOSIPPOMLA...

Praveen said...

என் இனம் அட நீ.... கலக்கிட்ட..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட்டா கஷ்டப்பட்டு விடைய கண்டுபிடிசா அதுக்குள்ள சரன் கண்டுபிடிச்சிட்டாரே?
என்னுடைய விடைக்கு விளக்கம்:

'ஒருவன்: இன்று sunday இல்லை.
அடுத்தவன்: இன்று திங்கட்கிழமை.'

இதில் ஒருவன் உண்மை பேசியிருந்தால் மட்டுமே, லாஜிக் சரியாக வரும், எனவே, ஒருவன் உண்மை பேசியதாக எடுத்துக்கொண்டு சுலபமாக விடை கண்டுபிடித்துவிடலாம்!

'ஒருவன்: நாளை சோமு பொய் பேசும் தினம்.'
அடுத்தவன்: நேற்று சிங்கம் பொய் பேசியது.

1. ஒருவன் உண்மை பேசுகிறான், எனவே அது ஞாயிறுமல்ல திங்களுமல்ல, (tue, wed, thu, fri, or Sat)

2. அடுடத்தவன் பொய் பேசுககிறான்,
"நேற்று சிங்கம் பொய் பேசியது."

சிங்கம் பொய் பேசும்தினங்கள்: திங்களள், செவ்வாய், புதன்

எனவே அடுத்தவன் கூற்று தவறூ என்றால் அது, Tue, Wed, Thu ஆக இருகக முடியாது, மீதம் இருப்பது Fri & Sat.

3. ஓருவன் உணமை பேசுகிறான்
'ஒருவன்: நாளை சோமு பொய் பேசும் தினம்.'

எனவே சனிக்கிழமை சோமு பொய் பேச வேண்டும். அப்படியென்றால் இன்று வெள்ளிகிழமை.

சனிக்கிழமை புலியும் பொய் பேசுகிறது

எனவே,
சோமு: புலி
ராமு: சிங்கம்
கிழமை: வெள்ளீகிழமை

நன்றி!

எஸ்.கே said...

ஏன் நண்பரே நீண்ட நாட்களாக பதிவிடவில்லை? தங்களிடமிருந்து சுவாரசியமான விஷயங்களை எதிர்பார்க்கிறோம்!